குறைந்த விலையில் தக்காளி விற்பனை
கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை
கன்னியாகுமரி
தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.120-க்கு மேல் விற்பனையாகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று அரசு தோட்டக்கலை துறை சார்பில் கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் முதற்கட்டமாக டான்ஹோட விற்பனை மையத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனையை குமரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண் தொடங்கி வைத்தார். குறைந்த விலையில் விற்கப்பட்ட தக்காளியை பொதுமக்கள் ஏராளமானோர் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story