50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விற்பனை
50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் (பொறுப்பு) தெரிவித்துள்ளாவது:-
மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் ரக விதைகளை வாங்கலாம்.
வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி ஆகிய வட்டாரங்களில் கருப்பு கவுணி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, அறுவத்தாம் குறுவை விதைகள் இருப்பில் உள்ளன. அதிகபட்சமாக கிலோவிற்கு ரூ.12.50 மானிய விலையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ விதைகள் மட்டும் வழங்கப்படும்.
இந்த நெல் விதைகளை வாங்க ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story