பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் விற்பனை


பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் விற்பனை
x
தினத்தந்தி 18 Aug 2023 3:15 AM IST (Updated: 18 Aug 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் உழவர் சந்தையில் பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தேனி

கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயன் பெறுவதற்காக இந்த உழவர் சந்தையில் காலை மற்றும் மாலை நேர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தையின் மூலம் தமிழக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் காலை நேர உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை நடைபெறுகிறது. மாலை நேர உழவர் சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி அரிசி, மூங்கில் அரிசி, கிச்சிலி சம்பா அரிசி, பூங்கார் கைகுத்தல் அரிசி, சாமை, கேழ்வரகு, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள். தேன், மரச்செக்கு எண்ணெய், சிறு தானியம் மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் மூலிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


Next Story