வட்டித்தள்ளுபடியில் கிரையபத்திரம் பெற வசதி


வட்டித்தள்ளுபடியில் கிரையபத்திரம் பெற வசதி
x

வட்டித்தள்ளுபடியில் கிரையபத்திரம் பெற வசதி

திருப்பூர்

திருப்பூர்,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையபத்திரம் பெற்றுக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் முதலிபாளையம், பல்லடம் நிலை-1, 2, பெரியார் நகர், உடுமலை, வேலம்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரைய பத்திரம் பெறாதவர்கள் வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ, நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனிவட்டியுடன் 3 தவணையாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை அடுத்த ஆண்டு மே மாதம் 3-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். எந்த காரணத்தை கொண்டும் காலநீட்டிப்பு செய்யப்படாது. இதை பயன்படுத்தி ஒதுக்கீடுதாரர்கள் கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என்று கோவை வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

=============


Next Story