சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு-கலெக்டர் தகவல்


சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு-கலெக்டர் தகவல்
x

சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை வருகிற 20-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள வழியாக வரவேற்க்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், வரவேற்புகூட அலுவலக உதவியாளர், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், கட்டிடப்பட வரைவாளர், கம்மியர் மின்னணுவியல், கம்மியர் கருவிகள், மின்சார பணியாள், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்துதல் தொழில்நுட்பவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளது. மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறும் பெண் பயிற்சியாளர்களுக்கு இலவசமாக மடிக்கணினி, சைக்கிள், சீருடை, பாடநூல், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 ஆகிய சலுகைகள் வழங்கப்படும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவும். மேலும் விண்ணப்ப கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story