சேலம் மாநகர போலீசில் சிறப்பு அதிவிரைவுப்படை


சேலம் மாநகர போலீசில் சிறப்பு அதிவிரைவுப்படை
x

சேலம் மாநகர போலீசில் சிறப்பு அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

சிறப்பு அதிவிரைவுப்படை

சேலம் மாநகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகர் பகுதியில் வன்முறை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர போலீசில் ஆயுதப்படை பிரிவில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் 10 போலீசார் அடங்கிய சிறப்பு அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்களுக்கான உடைகள், துப்பாக்கி, ஒலிப்பெருக்கி, முதல் உதவி பெட்டி, தீயணைப்பான், முககவசங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பார்வையிட்டார்.

கலவரம், வன்முறை

இது குறித்து அவர் கூறும் போது, மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலவரம், வன்முறையை தடுக்க தற்போது சிறப்பு அதிவிரைவு படை உருவாக்கப்பட்டு உள்ளது. மாநகர் பகுதியில் கலவரம் நடப்பது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சிறப்பு அதிவிரைவு படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலவரம் நடப்பதை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு வன்முறை தடுக்கும் பயிற்சிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, ஆயுதப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story