சேலத்தில் இளம்பெண் தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது
சேலத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
தறித்தொழிலாளி
சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி பூஜா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. 2½ வயதில் ஒரு குழந்தை உள்ளது. பூஜா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிந்தார்.
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த போது பூஜா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பூஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
இது குறித்து போலீசார் கூறுகையில், பூஜாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வீடு கட்ட கடன் பெற்று உள்ளோம். அந்த கடனை கட்ட முடியவில்லை. தனக்கு அடிக்கடி முதுகு வலி ஏற்பட்டது என்று அந்த கடிததத்தில் எழுதப்பட்டு உள்ளது. அந்த கடிதம் அவர் எழுதியதுதானா என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசாா தெரிவித்தனர்.
மேலும் கடிதத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் பூஜா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.