ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகம்
கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
வேலூர்
கே.வி.குப்பம் சந்தைமேட்டில் திங்கட்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. அதன்படி நடந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் இருந்தே ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. சுமார் 800 ஆடுகள் விற்பனைக்கு வந்திருத்தன. வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் வந்து இருந்தனர்.
ஆடு ஒன்றின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. வெள்ளாடு ரகத்தைச் சேர்ந்த ஆடுகளில் பெரும்பாலும் கருப்பு நிற ஆடுகள் அதிக அளவிலும், வெள்ளை கலந்த நிற ஆடுகள் குறைந்த அளவிலும் காணப்பட்டன. ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாகவும், மொத்தத்தில் இந்த வாரம் சென்ற வாரத்தை விட விற்பனை அமோகமாக நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story