நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ரூ.24¾ கோடிக்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை-கலெக்டர் அம்ரித் தகவல்


நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம்  ரூ.24¾ கோடிக்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 12 May 2023 6:45 AM IST (Updated: 12 May 2023 6:46 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ரூ.24¾ கோடிக்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ரூ.24¾ கோடிக்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன்

நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் 2 கூட்டுறவு வங்கிகள், 38 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள், 14 பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் 2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் மற்றும் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது ஆகும். கடந்த 2022-23 -ம் நிதி ஆண்டில் கூட்டுறவு நகர வங்கிகள் மூலம் 1,748 உறுப்பினர்களுக்கு ரூ.12½ கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் 583 உறுப்பினர்களுக்கு ரூ.77¾ கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் மூலம் நகைக்கடன், 12 ஆயிரத்து 116 உறுப்பினர்களுக்கு ரூ.62½ கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

உரம், விதைகள் விற்பனை

மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் நீலகிரி கூட்டுறவு நிறுவனம் மூலம் ரூ.66 லட்சத்திற்கு அத்தியாவசிய மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. பிரதம கூட்டுறவு பண்டக சாலைகளின் மூலம் ரூ.18 லட்சம் அளவிற்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ரூ.24¾ கோடிக்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story