பெரம்பலூரில் பழங்கள் விற்பனை மந்தம்


பெரம்பலூரில் பழங்கள் விற்பனை மந்தம்
x

பெரம்பலூரில் பழங்களின் விற்பனை மந்தமாக இருப்பதால் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர்.

பெரம்பலூர்

பழங்களின் வரத்து குறைந்தது

பொதுவாகவே ஆடி மாதத்தில் பழங்களின் விலை உயர்ந்து காணப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே பெரம்பலூர் நகரில் பழங்களின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே உள்ள பழக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பழங்களின் விலை (கிலோவில்) வருமாறு:-

ஒரு கிலோ ஆப்பிள் ரூ.200 முதல் ரூ.240 வரையிலும், மாதுளை ரூ.200 முதல் ரூ.220 வரையிலும், சாத்துக்குடி ரூ.60-க்கும், ஆரஞ்சு ரூ.160-க்கும், மாம்பழம் ரூ.100-க்கும், பன்னீர் திராட்சை ரூ.120-க்கும், கொய்யா, சப்போட்டா தலா ரூ.50-க்கும், சீதாப்பழம் ரூ.60-க்கும், தர்பூசணி- ரூ.20-க்கும், அன்னாசி- ரூ.70-க்கும், வாழை (தார்)- ரூ.350 முதல் ரூ.400 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை மந்தம்

இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறுகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது பழங்களின் விலை குறைந்ததாக கூறுகின்றனர். ஆனால் இங்கு பழங்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வந்து, பின்னர் தான் பெரம்பலூருக்கு வரும். போக்குவரத்து செலவும் அதிகம். சரக்கு வாகனங்களில் வரும் பழங்களும் சேதமடைகின்றன.

இதனால் பெரம்பலூரில் மேற்கண்ட விலைக்கு பழங்கள் விற்பனையாகி வருகின்றனர். விற்பனையும் மந்தமாகவே உள்ளது. ஆடி மாதம் கழித்து தான் பழங்களின் விலை ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது, என்றார்.

பெரம்பலூரில் பழங்களின் விற்பனை மந்தமாக இருப்பதால் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர்.


Next Story