வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை மந்தம்
ஆடி மாதத்தையொட்டி வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை மந்தமாக இருந்தது.
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன. வேலூர் மீன்மார்க்கெட்டில் மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை, விசேஷ நாட்களில் அசைவபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதேபோன்று அதிகளவு மீன்கள் விற்பனையாகும்.
ஆனால் ஆடிமாதம் என்பதால் நேற்று வேலூர் மீன்மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. வழக்கத்தை விட மீன்கள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆனால் கடந்த வாரத்தை போன்று மீன்களின் விலை காணப்பட்டது. ஒருகிலோ வஞ்சிரம் பெரிய மீன் ரூ.1,600-க்கும், நடுத்தர வஞ்சிரம் ரூ.700 முதல் ரூ.900-க்கும் இறால் ரூ.350 முதல் ரூ.450-க்கும், மகிமகி ரூ.380-க்கும், ஊசிவஞ்சிரம் ரூ.250-க்கும், கட்லா மீன்கள் ரூ.150-க்கும் விற்பனையானது. சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.350-க்கும், விறால் ரூ.400-க்கும் நெத்திலி ரூ.280-க்கும், நண்டு ரூ.280 முதல் ரூ.350-க்கும், மத்திமீன் ரூ.200-க்கும் நெய்மீன் ரூ.100-க்கும், ஜிலேபி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டன. ஆடிமாதம் முடியும்வரை மீன்கள் விற்பனை வழக்கத்தைவிட குறைவாக காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.