விபத்தில் காயமடைந்த சலூன் கடைக்காரர் சாவு
தக்கலை அருகே விபத்தில் காயமடைந்த சலூன் கடைக்காரர் சாவு
தக்கலை,
தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம், மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் பாகுலேயன் (வயது62). இவர் பாலப்பள்ளியில் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று காலையில் தனது பேரனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாமிவிளையில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பாகுலேயன் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் ஏற்பட்டது. பேரன் லேசான காயம் அடைந்தான். அருகில் நின்றவர்கள் பாகுலேயனை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் பாகுலேயன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குழிச்சல், மணக்காட்டு விளையை சேர்ந்த ஜாண்சன் (40) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.