பந்தலூரில் உப்பு மாதிரி சேகரிப்பு


பந்தலூரில் உப்பு மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 19 May 2023 4:30 AM IST (Updated: 19 May 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

அயோடின் இருப்பதை கண்டறிய பந்தலூரில் உப்பு மாதிரி சேகரிக்கப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், அனைவருக்கும் அயோடின் உப்பு கிடைக்கும் வகையிலும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் அயோடின் உப்பு விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், பந்தலூர் பஜாரில் உப்பு மாதிரி சேகரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட அரசு அயோடின் பற்றாக்குறை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் மற்றும் நவசாத், ரவீந்திரன் ஆகியோர் பந்தலூரில் உள்ள ரேஷன் கடைகள், மொத்த வியாபாரம், சில்லறை விற்பனை கடைகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட உப்புகள் வாங்கப்பட்டது. அவை சோதனைக்காக திருவாரூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய உணவு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அயோடின் பற்றாக்குறையாக உப்பு இருப்பின் சம்பந்தப்பட்ட உப்பு தயாரிப்பு நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story