மேலூர் அருகே சமத்துவ பொங்கல் விழா
மேலூர் அருகே சமத்துவ பொங்கல் விழா
மதுரை
மேலூர்
மேலூர் அருகே பூஞ்சுத்தி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்று நடும் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அதில் வேட்டி அணிந்து கலெக்டர் அனீஷ்சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ஒரே நேரத்தில் 1500 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனை தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேலூர் தாசில்தார் சரவணபெருமாள், பூஞ்சுத்தி ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், உதவி இயக்குனர் ஊரகம் அரவிந்தன், மதுரை காவல் கமாண்டோ நான்காம் பட்டாலியன் சூப்பிரண்டு பாஸ்கரன், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், பள்ளி கல்வித்துறை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், மேலூர் தொடக்க வட்டார கல்வி அலுவலர் ஜெயசித்ரா, பூஞ்சுத்தி தலைமை ஆசிரியர் ரேணுகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story