மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ள சமயபுரம் போலீசார்


மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ள சமயபுரம் போலீசார்
x

மாலை அணிந்து போலீசார் விரதம் மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நடைபெறும் பூச்சொரிதல் விழாவில் பொதுமக்கள் உள்ளிட்டோர் அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபடுவார்கள். இதில் மூன்றாவது வார பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் போலீஸ் நிலையம் சார்பாக பூக்களை தட்டுக்களில் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபடுவார்கள். சமயபுரம் போலீசார், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று அம்மனை வேண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துச்சாமி, பிரியாபானு ஆகியோர் நேற்று மாலை அணிந்து, கையில் காப்பு கட்டி 28 நாட்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர்.


Next Story