வாய்க்காலில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிப்பு


வாய்க்காலில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிப்பு
x

சூரப்பள்ளம் ஊராட்சியில் வாய்க்காலில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. வயல்கள் தரிசாக கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

கரம்பயம்:

சூரப்பள்ளம் ஊராட்சியில் வாய்க்காலில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. வயல்கள் தரிசாக கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ராஜா மடம் கிளைவாய்க்கால்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரப்பள்ளம் ஊராட்சியில் ராஜாமடம் கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

ஆண்டு தோறும் வழக்கமாக மேட்டூர் அணை திறந்ததும் ராஜா மடம் கிளை வாய்க்கால் மூலம் சூரப்பள்ளம் கழுவன் ஓடைக்கு தண்ணீர் வந்து நிரம்பி பொதுப்பணித்துறை வாய்க்கால் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

சம்பா சாகுபடி பாதிப்பு

இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் கோடை சம்பா சாகுபடி செய்வது வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறந்த 2 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை கழுவன் ஓடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

இதனால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 60 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் கோடை சம்பா சாகுபடி செய்ய முடியாமல் தரிசாக கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தரிசாக கிடக்கும் வயல்கள்

வழக்கமாக ஆடி மாதத்தில் சம்பா சாகுபடி தொடங்கப்படும். ஆனால் வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியாமல் வயல்கள் தரிசாக கிடக்கிறது. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் பம்பு செட் வைத்திருப்பவர்கள் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.

மேட்டூர் அணை தண்ணீரை எதிர்பார்த்து இருப்பவர்கள் விவசாயம் செய்வது கேள்விக்குறியாக உள்ளது. எனவே கடைமடை பகுதி வரை தண்ணீர் வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story