சாலையோரம் கொட்டப்படும் சாம்பார் வெள்ளரிக்காய்


சாலையோரம் கொட்டப்படும் சாம்பார் வெள்ளரிக்காய்
x

வேடசந்தூர் பகுதியில் விலை வீழ்ச்சியால் சாம்பார் வெள்ளரிக்காய்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டி சென்றனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு, அய்யலூர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் சாம்பார் வெள்ளரிக்காய் அதிகளவு பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் விளையும் சாம்பார் வெள்ளரிக்காய்கள் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. காரணம் கேரள மக்கள் அதிகளவு சாம்பார் வெள்ளரிக்காயை விரும்பி சாப்பிடுவதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு அதிகளவு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் மார்க்கெட்டில் சாம்பார் வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூ.13 வரை விற்றது. தற்போது அதிக வரத்தால் ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் சம்பார் வெள்ளரிக்காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் வண்டி வாடகைக்கு கூட பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேடசந்தூர் பகுதியில் சாலை ஓரங்களில் சாம்பார் வெள்ளரிக்காய்களை கொட்டிச் செல்கின்றனர்.


Next Story