ஒரே நாளில் கடன் வழங்கக்கோரி வங்கிமுன் நரிக்குறவர்கள் சாலை மறியல்


ஒரே நாளில் கடன் வழங்கக்கோரி வங்கிமுன் நரிக்குறவர்கள் சாலை மறியல்
x

சிறுதொழில் வழங்க மனு கொடுத்துள்ள தங்கள் அனைவருக்கும் ஒரே நாளில் கடனுதவி வழங்கக்கோரி வங்கி முன் நரிக்குறவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

சிறுதொழில் வழங்க மனு கொடுத்துள்ள தங்கள் அனைவருக்கும் ஒரே நாளில் கடனுதவி வழங்கக்கோரி வங்கி முன் நரிக்குறவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிறுதொழில் ெதாடங்க கடன்

ஆரணி நகரில் தச்சூர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் ஆரணி பகுதிைய சேர்ந்த நரிக்குறவர் சமூத்தை சேர்ந்த 28 பேர் சிறுதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.ஒரு லட்சம் கேட்டு மனு செய்திருந்தனர். அதில் 12 பேருக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒரே நாளில் கடனுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு வங்கி மேலாளர் கவுதம் சர்மா, ''எங்கள் நிர்வாக அனுமதியின்பேரில் ஒரே நாளில் 12 பேருக்கும் கடன் வழங்க முடியாது. ஆனால் எவ்வளவு விரைவில் வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்குகிறோம்'' என தெரிவித்துள்ளார்.

ஆனால் நரிக்குறவர்கள் இதனை ஏற்க மறுத்து ஒட்டுமொத்தமாக ஆரணி- தச்சூர் சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வங்கி மேலாளர் கவுதம் சர்மாவிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வங்கி மேலாளர் கூறுகையில், ''28 பேர் மனு செய்திருந்தனர். அவர்களில் 12 பேருக்கு தலா ரூ.ஒரு லட்சம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு மனுவையும் திருவண்ணாமலை முதன்மை அலுவலகத்திற்கும், சென்னை தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பி அவர்கள் பரிசீலனை செய்து அனுமதி வழங்கிய பிறகுதான் கடனுதவி வழங்க முடியும். ஆனால் இன்றே கொடுத்துவிட்டு இன்றைய தரவேண்டும் என கோரிக்கை விடுகிறார்கள் அது எங்களால் முடியாது.

3 வாரத்தில்...

தற்போது வங்கி கடன் அனைவருக்குமே நிறுத்தப்பட்டு வருகிறது இவர்களில் 12 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு வாரத்திற்கு 4 நபர்கள் வீதம் 3 வாரத்தில் அனைவருக்கும் வழங்குகிறோம் என நாங்கள் தெரிவித்தோம் ஆனால் 28 நபர்களுக்கும் கடன் வழங்க வேண்டும் என அவர்கள் கூறுவதால் அவ்வாறு செய்ய முடியாது'' என தெரிவித்தார்.

போலீசார் சம்பந்தப்பட்ட நரிக்குறவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நரிக்குறவர்கள் 12 பேருக்கும் ஒரே நாளில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வங்கி மேலாளர் அளித்த விளக்கத்தை நரிக்குறவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தெரிவித்து சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story