வாஞ்சிநாதர் கோவிலில் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் குடும்பத்துடன் சாமி தரிசனம்


வாஞ்சிநாதர் கோவிலில் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
x

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது.இங்கு எமனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக எமதர்மராஜாவிற்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வார்கள். இந்த கோவிலுக்கு நேற்று காலை மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் மற்றும் அவரது சகோதரர் கோபாலன், இவரது மனைவி சந்திரா ஆகியோருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.பின்னர் எமதர்மராஜா, சித்திரகுப்தர் சன்னதிக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டார். பின்னர் வாஞ்சிநாதரை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.முன்னதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் ராஜா மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கவர்னர் இல.கணேசனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்பின்னர் கவர்னர் நிருபர்களிடம் கூறுகையில், நான் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார். அப்போது நிருபர்கள், அவரிடம் கோவை கார் வெடிப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நிருபர்களை பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதே தான் நானும் நினைக்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


Next Story