திருச்செந்தூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலையில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்தார். கோவிலில் இருக்கும் பேட்டரி கார் மூலும் அழைத்து வரப்பட்ட அவர்கள் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹாரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ரசிகர்கள் ஒருவருக்ெகாருவர் முண்டியடித்துக் கொண்டு 'செல்பி' எடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story