திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுரை வீரன் கோவிலில் சாமி சிலைகள் சேதம் போலீசார் விசாரணை


திருவெண்ணெய்நல்லூர் அருகே    மதுரை வீரன் கோவிலில் சாமி சிலைகள் சேதம்    போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுரை வீரன் கோவிலில் சாமி சிலைகள் சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரும்பட்டு காலனி பகுதியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சாமி சிலைகளில் 4 சிலைகளின் கைககள், துப்பாக்கிகள் மற்றும் நாய் சிலை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றுவிட்டனர்.

இதற்கிடையே அதேபகுதியை சேர்நத வரதன் என்பவர் மீது சந்கேதம் இருப்பதகா கூறி, சதீஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story