உலகளந்த பெருமாள் கோவிலில் சாமி வீதிஉலா


உலகளந்த பெருமாள் கோவிலில் சாமி வீதிஉலா
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சாமி வீதிஉலா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான நிகழ்ச்சி மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில் கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும் வெவ்வேறு வாகனத்தில் சாமி விதிஉலாவும் நடைபெற்று வருகிறது. விழாவில் 4-ம் நாளான நேற்று சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் காலையில் முத்துபந்தல் வாகனத்திலும், மாலையில் சேஷ வாகனத்திலும் சாமி வீதி உலா கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்திர விமானத்திலும், மாலையில் தங்க கருட சேவை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பவர் ஏஜெண்டு கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர், உபயதாரர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story