லட்சுமி நரசிம்மர் கோவிலில் தங்க கேடயத்தில் சாமி வீதி உலா


லட்சுமி நரசிம்மர் கோவிலில் தங்க கேடயத்தில் சாமி வீதி உலா
x

லட்சுமி நரசிம்மர் கோவிலில் தங்க கேடயத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதசி புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து. சுவாமி தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் சுவாமி சன்னதி தெரு கோடி வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் வீடு தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story