அரசு பணியாளருக்கான மாதிரி தேர்வு
அரசு பணியாளருக்கான மாதிரி தேர்வு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நாகர்கோவில் பயோனியர் அகாடமியும் இணைந்து நடத்தும் யு.பி.எஸ்.சி. (அரசு பணியாளர் தேர்வு) முதல் நிலை தேர்வு வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நாகர்கோவில் பயோனியர் அகாடமியும் இணைந்து நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த இலவச மாதிரி தேர்வு காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல் தாளும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2-ம் தாளும் நாகர்கோவில் மணிமேடை அருகில் உள்ள பயோனியர் அகாடமியில் நடைபெறும்.
இந்த இலவச பயிற்சி தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் 8124005588, 8124006688 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.