பூசாரிபட்டி அருகே சேதமடைந்து கிடக்கும் பி.ஏ.பி. பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூசாரிபட்டி அருகே சேதமடைந்து கிடக்கும் பி.ஏ.பி. பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

பூசாரிபட்டி அருகே சேதமடைந்து கிடக்கும் பி.ஏ.பி. பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

குடிமங்கலம்

பூசாரிபட்டி அருகே சேதமடைந்து கிடக்கும் பி.ஏ.பி. பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான கால்வாய்

பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி. பிரதான கால்வாய் 126 கிலோமீட்டர் நீளம் உடையது. இதில் பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் பி.ஏ.பி. பிரதான கால்வாய் 30 கிலோமீட்டர் நீளம் உடையது. இந்த பிரதான கால்வாய் மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

சீரமைக்க வேண்டும்

பூசாரிபட்டி அருகே புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் 2-ம் மண்டல பாசனத்தில் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவசாய நிலங்களும், 4-ம் மண்டலத்தில் 7 ஆயிரத்து 319 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. தற்போது புதுப்பாளையம் கிளை கால்வாய் சீரமைக்கப்படுகிறது. இப்பகுதிகளில் களிமண் நிறைந்த பகுதி என்பதால் கரைகள் வலுவிழந்து கால்வாய்கள் அடிக்கடி சேதமடைந்து விடுகின்றன.

இந்த நிலையில் பிரதான கால்வாயில் பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் சிலாப்புகள் சேதமடைந்து கிடக்கிறது. பிரதான கால்வாயில் வினாடிக்கு 1080 கன அடி தண்ணீர் செல்லும் தரைஅகலம் 18 அடி நீரின் ஆழம் 9,51 அடி ஆகும். பிரதான கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதமடைந்து கிடக்கும் கான்கிரீட் சிலாப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story