Normal
வீட்டருகே பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல்
காரிமங்கலம் அருகே வீட்டருகே பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது வீட்டின் அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்து விற்பனைக்காக கொட்டி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 யூனிட் மணலை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து துணை தாசில்தார் அகிலாண்டேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story