மணல் கடத்தியவர் கைது டிராக்டர் பறிமுதல்


மணல் கடத்தியவர் கைது டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் கைது செய்ய்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூரில் மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் கைது செய்ய்பட்டார்.

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று முன் தினம் இரவு ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டிராக்டரை ஓட்டி வந்தவரிடம் மணல் ஏற்றிச்செல்வதற்கான அனுமதி உள்ளதா என கேட்டபோது அவரிடம் எதுவும் இல்லை. இதனால் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜை (வயது 26) கைது செய்தனர்.


Next Story