டிராக்டரில் மணல் கடத்தியவருக்கு வலைவீச்சு
மணல்மேடு அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை வலைவீசி தேடி வருகின்றனர்
மயிலாடுதுறை
மணல்மேடு:
மணல்மேடு கடலங்குடி பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில்போலீசார் கடலங்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றிய டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்த முயற்சித்தபோது டிராக்டரை இருள் நிறைந்த பகுதி வழியாக வேகமாக மறைவான இடத்திற்கு ஓட்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிராக்டர் மற்றும் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story