மணல் கடத்தல்; 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்தல்; 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தல்; 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை தாசில்தார் மணிமேகலை மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பா.கிள்ளனூர் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 5 மாட்டுவண்டிகளையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மாட்டு வண்டியின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை வழியாக கூழாங்கற்கள் கடத்தி வந்த 2 லாரிகளை விழுப்புரம் மண்டல புவியியலாளர் அருள் முருகன் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடைக்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story