முத்தரசநல்லூரில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும்


முத்தரசநல்லூரில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும்
x

முத்தரசநல்லூரில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

ஜீயபுரம், செப்.15-

முத்தரசநல்லூரில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் கடத்தல்

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழித்தடத்தில் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ளது ஜீயபுரம். இப்பகுதியில் உள்ள முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மணல் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வந்தது.

மாட்டுவண்டி, லாரி உள்ளிட்டவைகளில் இரவோடு இரவாக மணல் கடத்தல் நடைபெற்றது. இதனால் மணல் திருட்டு நடைபெற்ற இடத்தில் சுமார் 25 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டது. அதன்பின் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மணல் கடத்தல் தடுக்கப்பட்டது.

கோரிக்கை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முத்தரசநல்லூர் - கூடலூர் இணைப்பு பால பகுதியில் உள்ள கொடிங்கால் வாய்க்காலில் மீண்டும் மாட்டு வண்டிகள் மூலம் இரவு நேரங்களில் மணல் கடத்தல் சம்பவம் தலைதூக்கி உள்ளது.

மாட்டு வண்டிகளில் மணல் திருடி ரூ.3 ஆயிரத்து 500-க்கு மேல் விற்பனை செய்து வருகிறார்கள். எனவே மணல் கடத்தலை ஆரம்பத்திலேயே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story