கோவில் நிலத்தில் மண் திருட்டு; 5 பேர் கைது
மணல்மேடு அருகே கோவில் நிலத்தில் மண் திருடியதாக 5 பேரை கைது செய்த போலீசார் 4 டிராக்டர்கள், பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மணல்மேடு;
மணல்மேடு அருகே கோவில் நிலத்தில் மண் திருடியதாக 5 பேரை கைது செய்த போலீசார் 4 டிராக்டர்கள், பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மண் திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே பொய்கைக்குடி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மண் திருடப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணல்மேடு போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு, காளி பொய்கைக்குடி கிராமம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 47) சிலருடன் சேர்ந்து டிப்பருடன் கூடிய 4 டிராக்டர்களில் பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் மண் திருடியது தெரியவந்தது.
கைது
உடனே போலீசார், திருடப்பட்ட மண்ணுடன் 4 டிராக்டர்கள் மற்றும் பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்து மணல்மேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் மண் திருடியதாக கண்ணன் மற்றும் குத்தாலம் அருகே அகர சென்னியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் தினேஷ் (30), பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் மகன் விக்கி (23), அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமாரசாமி மகன் நித்திஷ்குமார் (22), அண்ணாதுரை மகன் ஜான்சன் (31) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.