மணல் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
சீ்ர்காழியில், மணல் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆனால், ஆன்லைன் சரிவர வேலை செய்தாததால் நேற்று காலை சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள முன்பதிவு அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் லாரிகளை சீர்காழி புறவழிச் சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு முன்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சீர்காழி தாலுகா லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். டிப்பர் லாரி சங்க மாவட்ட நிர்வாகி பாக்கியராஜ், லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சிவக்குமார், பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
லாரிகளில் மணல் அள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மணல் ஏற்ற அனுமதிக்க வேண்டும். உள்ளூர் லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மணல் குவாரிகளில் அரசு அறிவித்த தொகையைவிட கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது. மணல் குவாரிகளில் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தால் புறவழிச் சாலையில் இருந்து நிம்மேலி செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.