அழகுநாச்சியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
அழகுநாச்சியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருச்சி
தொட்டியம்:
தொட்டியம் சந்தைப்பேட்டையில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில் பொதுமக்களின் நலன் காக்க வேண்டி காவிரி ஆறு சென்று தீர்த்தக்குடம், பன்னீர்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மறுநாள் காவிரி ஆற்றுக்கு சென்று அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து வந்து மாவிளக்கு, தேங்காய் பழத்தட்டுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று கிடா வெட்டுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, வாணவேடிக்கையுடன் திருவிழா நிறைவுபெற்றது.
Related Tags :
Next Story