பொற்பனை கோட்டை முனீஸ்வரருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
பொற்பனை கோட்டை முனீஸ்வரருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
திருவரங்குளம் அருகே உள்ள பொற்பனை கோட்டை முனீஸ்வரர் கோவிலில் ஆடி கடைசி வாரத்தையொட்டி புதுக்கோட்டை சாந்தா அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். பின்னர் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொற்பனை கோட்டை முனீஸ்வரரை தரிசனம் செய்தனர். மேலும், புதுக்கோட்டை, ஆலங்குடியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியில் காட்டு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவரங்குளம் வல்ல நாட்டு செட்டியார்கள் சமுதாய கட்டிடத்தில் திரளான பக்தர்கள் திருப்புகழ் மற்றும் முருகன் பாடல்களை பாடி சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக சிவன் கோவிலில் யாகம் வளத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.