வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்


வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்திலுள்ள மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழாவிற்கான கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ராஜ மேளத்துடன் வெண்கொடி தெருக்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் நடந்தது. வருகிற 29-ந் தேதி சந்தனகூடு திருவிழா நடைபெற உள்ளது. வருகிற அக். 5-ந்தேதிகொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.


Next Story