முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தோப்பில் சந்தனமரம் திருட்டு
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தோப்பில் சந்தனமரம் திருட்டு
தஞ்சாவூர்
கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் சான்றோர் தோப்பு தெருவில் வசிப்பவர் எத்தையன்(வயது66). விவசாயி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவருக்கு சொந்தமான தோப்பு கும்பகோணம்- திருவையாறு சாலையில் ராமானுஜபுரம் பகுதியில் உள்ளது. இந்த தோப்பில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்தன. நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து எத்தையன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story