மழையால் குளங்களில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க மணல் மூட்டைகள்
நாங்குநேரி யூனியனில் மழையால் குளங்களில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியனில் 65 குளங்கள் உள்ளன. நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் ஏற்பாட்டில் வடகிழக்கு பருவமழையால் எந்த குளத்தில் உடைப்பு ஏற்பட்டாலும் அடைப்பதற்கு வசதியாக ஏராளமான மணல் மூட்டைகள் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் மேற்பார்வையில் முதல்கட்டமாக இறைப்புவாரி, செண்பகராமநல்லூர், சிங்கநேரி ஊராட்சி பகுதி குளங்களுக்கு மணல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story