சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு


சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சங்கடஹர சதுர்த்தி நாளான நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் காலை 7 மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் கணபதி ஹோமம், சுவாமிக்கு தங்க கவச சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதேபோல் திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு மாலை 5 மணியளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சுவாமியின் தங்கதேர் உலா நடந்தது.

மேலும் திண்டுக்கல் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், சவுராஷ்டிராபுரம் விநாயகர் கோவில், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு


Next Story