பேய்க்குளத்தில் சுகாதார குறைபாடு:7 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


பேய்க்குளத்தில் சுகாதார குறைபாடு:7 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேய்க்குளத்தில் சுகாதார குறைபாடு காரணமாக 7 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார். தியாகராஜன்,, ஞானராஜ், அஸ்வீன், ஜான் நீயூமன், சுனில் தர்ஷன், திருவடி வாசன் உள்ளிட்டோர் பேய்க்குளத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சுகாதார குறைபாடு காணப்பட்ட 7 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கடைகளை சுகாதாரத்துடனும், காலவாதியான பொருட்கள் விற்பனையை தவிர்க்கவும் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Next Story