முறையாக கட்டப்படாத கால்வாயால் சுகாதார சீர்கேடு
உப்பரந்தாங்கல் கிராமத்தில் முறையாக கட்டப்படாத கால்வாயால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம்
உப்பரந்தாங்கல் கிராமத்தில் முறையாக கட்டப்படாத கால்வாயால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
முறையாக கட்டப்படாத கால்வாய்காவேரிப்பாக்கம் ஒன்றியம் உப்பரந்தாங்கல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே சில வருடங்களுக்கு முன்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. இது சரியான முறையில் கட்டப்படாததால் அங்கன்வாடி மையம் எதிரே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வெளியேற நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story