குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு


குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு
x

சிக்கலில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

சிக்கலில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

சிக்கலில் உள்ள திருவாரூர்-நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலை ஆகும். இந்த சாலை வழியாக வேளாங்கண்ணி, நாகூர், நாகைக்கு சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட திரளான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நாகை ஒன்றியம் சிக்கல், பொரவச்சேரி ஊராட்சி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் அள்ளாததால் துர்நாற்றம்

இந்த தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளாமல் உள்ளது. இதனால் அங்கு குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். குப்பைகள் தேங்கி கிடப்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

நடவடிக்கை

சில நேரங்களில் குப்பைகளை எரித்து விடுவதால் அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து உடனுக்குடன் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story