ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
இடையக்கோட்டை பகுதியில் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணையில் இருந்து திறக்கப்படுகிற தண்ணீர், நங்காஞ்சியாறு வழியாக கரூர் அமராவதி அணைக்கு போய் சேருகிறது. இடையக்கோட்டை அருகே நங்காஞ்சியாற்றில் கழிவுநீர் கலந்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீரோடு கழிவுநீரும் கலந்துசென்று விடும். ஆனால் தற்போது ஆங்காங்கே ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து காணப்படுகிறது. ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாகி விட்டது. எனவே நங்காஞ்சியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடையக்கோட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story