கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு


கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு
x

கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

திருச்சி

சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாகாளிகுடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தெருக்களில் இருபுறங்களில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்கள் குப்பைகள் மண்டி கிடப்பதால் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகவும் மாறி வருகிறது. மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் செல்லும் கால்வாயை சுத்தம் செய்து கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று பலமுறை

ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


Next Story