தெருவில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
தெருவில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூதூர் ஊராட்சி தெற்கு பெரிய தெருவில் பலநாட்களாக கழிவுநீர் உள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மூதூர் ஊராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையினர், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story