கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் தூய்மை பணி
கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் தூய்மை பணி நடைபெற்றது.
சேரன்மகாதேவி:
கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் நடவடிக்கையாக நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் தமயந்தி, துணை தலைவர் சுந்தராஜன், செயல் அலுவலர் மாலதி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பி.எஸ்.என். தொழில்நுட்ப கல்லூரி பள்ளி மாணவிகள், கோபாலசமுத்திரம் கிராம உதயம் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், நீர் நிலையான வாகைகுளத்தில் கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. கோபாலசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்புறத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் மற்றும் பிராஞ்சேரி யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு செய்யப்பட்டது.