தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெறக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெறக்கோரி  தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெறக்கோரி சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்,

ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாக்கினார். செயலாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்ளாட்சி துறையில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை 152-ஐ திரும்ப பெற வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டதை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலமுறை ஊதியம்

ஆர்ப்பாட்டம் குறித்து தூய்மை பணியாளர்கள் கூறும் போது, கொரோனா காலங்களில் உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பங்கு இன்றிமையதாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை. உள்ளாட்சி துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து சட்டப்படி உள்ள சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியார் மயமாக்குவதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story