உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்


உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்
x
தினத்தந்தி 28 July 2023 6:00 AM IST (Updated: 28 July 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போடப்பட்டு உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை சுத்தம் செய்ய கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

அத்துடன் நவீன ரோபோக்களும் வாங்கப்பட்டன. அவற்றை வைத்து பாதாள சாக்கடை குழாயில் மேல் பகுதியில் போடப்பட்டு உள்ள மூடியை திறந்து அடைப்புகளை சரிசெய்து வருகிறார்கள்.


அதுபோன்று சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை சரிசெய்யவும் தூய்மை பணியாளர்களுக்கு கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே சாக்கடையில் இருந்த அடைப்புகளை சரிசெய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் எவ்வித உபகரணங்களும் இல்லாமல், உள்ளே இறங்கி சுத்தம் செய்தனர். இதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்ய உரிய உபகரணங்களுடன் தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் எப்படி அவர்களை உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்ய அனுமதித்தனர் என்பது தெரியவில்லை. எனவே அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உபகரணங்கள் கொடுத்து சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



---


Image1 File Name : J_JOSEPH_Staff_Reporter-18479721.jpg


----


Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore



Next Story