தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்


தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
x

தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட தரகம்பட்டியில் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நோக்கி மேற்கொள்ளும் பயணம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டன. இதில், கடவூர் ஒன்றிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story