சங்கரன்கோவிலில் நாட்டுவெடிகுண்டு விவகாரம்:என்.ஐ.ஏ. விசாரிக்க இந்து முன்னணி கோரிக்கை


சங்கரன்கோவிலில் நாட்டுவெடிகுண்டு விவகாரம்:என்.ஐ.ஏ. விசாரிக்க இந்து முன்னணி கோரிக்கை
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் நாட்டுவெடிகுண்டு எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கோரிக்கைவிடுத்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு சிலிண்டர் வெடிகுண்டு வெடித்து, அந்த அதிர்வலைகளில் இருந்தே தமிழகம் இன்னும் மீளாத நிலையில், நேற்று முன்தினம் சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவில் முன்பு நாட்டு வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டிருப்பது மேலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இந்து கோவில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதையே இது காட்டுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் எல்லைப் பகுதியில் உள்ள இந்த மாவட்டத்தை போலீசார் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு புளியங்குடியில் இந்து அமைப்பு நிர்வாகியின் மரக்கடையை எரித்த உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவில் முன்பு கிடந்த வெடிகுண்டு குறித்து தென்காசி மாவட்ட போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவர வாய்ப்பில்லை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நாராயணசாமி- கோமதி அம்மன் கோவில் முன்பு கண்டறியப்பட்டுள்ள வெடிகுண்டு குறித்த விசாரணையை என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Next Story