ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு
ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு நடந்தது.
திருவாரூர்
திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு மோதக கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது. இதேபோல் ஞான சித்தி விநயாகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவில் தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவில் விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
Related Tags :
Next Story